மகாராஷ்டிர மாநிலம் பன்வெல்லுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்கான் துறவிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி ராய்காட் மாவட்டத்தில் உள்ள பன்வெல் பகுதியில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அதன் பின்னர் அங்குள்ள இஸ்கான் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, இஸ்கான் துறவிகளுடன் சேர்ந்து பிரதமர் மோடி”ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா என்ற பக்தி பாடலை பாடினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.