பழங்குடி சமூகங்களை மேம்படுத்துவதில் பகவான் பிர்சா முண்டாவின் உழைப்பு நம்மை தொடர்ந்து ஊக்குவிப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ஜனஜாதிய கவுரவ் திவாஸ் தினத்தில், பகவான் பிர்சா முண்டா ஜியின் பிறந்தநாளில் அவரது பாரம்பரியத்தை நினைவு கூர்வோம்.
பழங்குடி சமூகங்களை மேம்படுத்துவதில் அவரது இடைவிடாத அர்ப்பணிப்பும், அநீதிக்கு எதிரான அவரது துணிச்சலான போராட்டமும் தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறது என தெரிவித்துள்ளார்.
இதேபோல் குருநானக் தேவ தெய்வீகப் போதனைகள் நம்மை நீதி, இரக்கம் மற்றும் மனித குலத்திற்குச் செய்யும் சேவையின் பாதையில் நடக்கத் தூண்டும் வகையில் குர்பூராப் பண்டிகையை முன்னிட்டு பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒற்றுமை மற்றும் அமைதிக்கான அவரது செய்தியை ஏற்றுக்கொண்டு, ஒரு நல்லிணக்க மற்றும் வளமான தேசத்திற்காக ஒன்றிணைவோம் எனவும் எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.