ஒடிசாவில் நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை, வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் சோதனை ஒடிசாவின் கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை, இந்திய ஆயுதப்படைகளின் அனைத்து சேவைகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், நாட்டின் முதல் நீண்ட தூர ஹைப்பர்சோனிக் பயணத்தின் வெற்றிகரமான ஏவுகனை சோதனை நடத்திய DRDO, ஆயுதப்படைகள் மற்றும் தொழில்துறைக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பதிவில், நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி இந்தியா ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய முக்கியமான மற்றும் மேம்பட்ட இராணுவ தொழில்நுட்பங்களின் திறன்களைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் குழுவில் நம் நாட்டை சேர்த்துள்ளது DRDO-வின் அபார சாதனை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.