பாஜக கூட்டணியில் புதிய நீதி கட்சி தொடரும் என அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 33-வது பட்டமளிப்பு விழா வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இ விழாவில் பல்கலையின். வேந்தர் ஏ.சி.சண்முகம்., சிறப்பு விருந்தினர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏசி சண்முகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய நீதி கட்சி தொடர்ந்து இடம் பெறும் என்றும் கூட்டணி தொடரும் என்றும் தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை அனைத்து இடங்களிலும் உள்ளதாகவும், ம். தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும் என்றும் ஏ.சி.சண்முகம் கூறினார்.