தனது பேச்சாலும், எழுத்தாலும் சுதேசி வேள்வியை ஊட்டியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை என தமிக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், சுதந்திரப் போராட்டத்தில், இரட்டை ஆயுள் தண்டனை பெற்றும், தனது சுதந்திர வேட்கையை விட்டு விடாமல், இறுதி வரை போராடிய கப்பலோட்டிய தமிழர், ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் நினைவு தினம் இன்று.
சுதந்திரப் போராட்டத்தில், நாட்டுக்காகத் தனது உடைமைகள் அனைத்தையும் தியாகம் செய்து, தேச விடுதலைக்காக, கடுமையான சிறைத் தண்டனைகளை அனுபவித்தவர். தமது பேச்சாலும், எழுத்தாலும், செயல்பாடுகளாலும் சுதேசி வேள்வியை ஊட்டியவர்.
தன்னலமற்ற வரலாறு கொண்ட வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.