கோட்டையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டும் முதலமைச்சர் வேலை அல்ல என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கொண்டு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பெயர் சூட்டுவதாக குற்றம் சாட்டினார்.
மேலும், கோட்டையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டும் முதலமைச்சர் வேலை அல்ல எனவும், விவசாயிகளுக்கு என்ன தேவை என அறிந்து ஆட்சி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் உதயநிதி என விமர்சித்தார். மகன் உதயநிதியை தந்தை ஸ்டாலின் புகழ்ந்து பேசுவதாகவும், தந்தை ஸ்டாலினை மகன் உதயநிதி பாராட்டி பேசும் வேடிக்கை மட்டுமே அரங்கேறி வருவதாக கூறினார். பொதுமக்களை பற்றி இருவருக்குமே கவலை இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.