சென்னை கீழ்ப்பாக்கத்தில் நகை பட்டறையிலிருந்து 20 சவரன் நகைகளை திருடிக்கொண்டு மேற்குவங்கத்திற்குச் தப்பிச்சென்ற நபரை, தீரன் பட பாணியில் போலீசார் கைது செய்தனர்.
கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெருவில் அருண்குமார் என்பவரின் நகைப் பட்டறையில் வேலை பார்த்து வந்த சைபுல் ரஹ்மான் என்பவர், 20 சவரன் நகைகளை திருடியது சிசிடிவி காட்சி மூலம் தெரியவந்தது.
இதுகுறித்த புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், சைபுல் ரஹ்மானின் சொந்த ஊரான மேற்குவங்க மாநிலத்தில் உள்ள காஞ்சாரா கிராமத்திற்கு சென்று அவரைக் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். மேலும், அவரிடம் இருந்து 18 சவரன் நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
















