ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட 7 கிராமங்களை அபிராமம் பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட நத்தம், மணி நகரம், ஆண்டனாயகபுரம், முத்தாதிபுரம் உள்ளிட்ட 7 கிராமங்களை அபிராமம் பேரூராட்சியுடன் இணைக்க முடிவு எடுத்ததாக தெரிகிறது.
இதைக் கண்டித்து 300க்கும் மேற்பட்ட பெண்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.