சென்னை மாநகராட்சி அம்பத்தூர் 7-ஆவது மண்டல அதிகாரிகளை கண்டித்து அம்பத்தூர் டாஸ் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 300-க்கும் மேற்பட்ட டாஸ் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். பின்னர், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.