நைஜீரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, கோலாப்பூரில் வடிவமைக்கப்பட்ட நேர்த்தியான வெள்ளி கலசத்தை அந்நாட்டு அதிபர் போலோ அகமது தினுபுவுக்கு பரிசளித்தார்.
உயர் ரக வெள்ளியில் செய்யப்பட்ட கலசமானது, விழாக்காலத்தில் எளிதான முறையில் பயன்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளி கலசத்தில் பஞ்சாமிர்தம் பிரசாதமாக விநியோகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
















