கேரள மாநிலம் திருச்சூர் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரியை தொடர்புகொண்டு டிஜிட்டல் முறையில் கைது செய்துள்ளாக கூறி, பணமோசடி செய்ய முயன்ற இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஸ்கைப் அல்லது வீடியோ கான்பரன்ஸ் மூலம் தாங்கள் ஏதோ குற்றத்தில் சிக்கி உள்ளதாகவும், டிஜிட்டல் முறையில் கைது செய்துள்ளதாகவும் கூறி பணம் பறிப்பது அதிகரித்து வருகிறது. அந்தவகையில், திருச்சூர் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரியை வீடியோ அழைப்பில் தொடர்புகொண்ட இளைஞர், அவரை டிஜிட்டல் முறையில் கைது செய்ததாக கூறினார்.
அப்போது எதிர்முனையில் பேசியது உண்மையான போலீஸ் அதிகாரி என்பதை அறிந்ததும் அந்த இளைஞர் விழி பிதுங்கி நின்றார். விசாரணையில், அவர் மும்பையை சேர்ந்தவர் என்பதும், கடையை வாடகைக்கு எடுத்து இதுபோன்ற மோசடியில் ஈடுபடுவதும் தெரியவந்தது.