கேரள மாநிலம் கொட்டாரக்கரை பகுதியில் அரசு பேருந்து மீது கார் மோதியதில் பேருந்தின் பின் சக்கரங்கள் தனியாக கழன்று சென்றன.
கொட்டபுரம் அருகே பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே வேகமாக வந்துகொண்டிருந்த கார் பேருந்தின் மீது மோதியது. இதில் பேருந்தின் பின் சக்கரங்கள் தூக்கி வீசப்பட்டன. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பிய நிலையில், இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.