நாகை மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் வரும் 27 மற்றும் 28-ம் தேதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாகையிலுள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை, கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜெயராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடும் அலை சீற்றம் ஏற்படகூடும் என்பதால் கடலுக்குள் மீனவர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடலுக்குள் சென்றிருக்கும் அனைத்து படகுகளும் வரும் 23-ம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.