மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து 7வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை விமான நிலையம் விரிவாக்க பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இதற்காக ஆறு கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, இழப்பீடு வழங்கப்பட்டது.
இதனையடுத்து சின்ன உடைப்பு பகுதியை சேர்ந்த மக்கள் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநகராட்சி பகுதியில் இடம் மற்றும் வீடு கட்டிக் கொடுக்க வலியுறுத்தி இப்பகுதி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மழையையும் பொருட்படுத்தாமல் குடைபிடித்தபடி கிராம மக்கள் 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















