ராமேஸ்வரம் கோவிலில் உள்ள அக்னி தீர்த்தம் அருகே கழிவுநீர் கடலில் கலப்பது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் பதில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கோயில் பகுதியில் உள்ள அக்னி தீர்த்தம் அருகே கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்மென ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் இந்த விவகாரத்தில் ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.