நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள அம்பலவாணபுரம் பெருமாள் குளத்தின் கரைகளில் 700 பனை விதைகளை பள்ளி மாணவ, மாணவிகள் நடவு செய்தனர்.
விக்கிரமசிங்கபுரத்தில் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டனர். அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.