மதுரை அருகே பிரேக் பிடிக்காமல் தறிகெட்டு ஓட்டிய அரசு பேருந்து ஆட்டோக்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
தென்பழஞ்சி பகுதியில் இருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. எல்லிஸ்நகர் மேம்பாலத்தில் இருந்து இறங்கியபோது பிரேக் பிடிக்காததால் பேருந்து தறிகெட்டு ஓடியது.
அப்போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது பேருந்து மோதியதில் இரண்டு ஆட்டோக்கள் சேதமடைந்தன. சிமெண்ட் தடுப்பின் மீது பேருந்து மோதி நின்ற நிலையில், நல்வாய்ப்பாக பயணிகள் உயிர்தப்பினர்.