விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஏடிஎம் மையம் இருளில் மூழ்கியதால் செல்போன் டார்ச் லைட் உதவியுடன் பணம் எடுக்கும் சூழல் ஏற்பட்டது.
சாத்தூர் மெயின்சாலையில் பாரத் ஸ்டேட் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஏடிஎம் இயந்திரங்கள் அமைந்துள்ள வளாகம் முழுவதும் இருளில் மூழ்கியது. இதனால் ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க வந்த பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர். மேலும், சிலர் தங்களது செல்போனில் உள்ள டார்ச் லைட் உதவியுடன் பணம் எடுத்து சென்றனர்.
















