குஜராத் மாநிலம் போர்பந்தரில் சன்யுக்த் விமோசன் என்ற பெயரில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண கூட்டு பயிற்சி நடைபெற்றது.
இந்திய ராணுவத்தினர் மேற்கொண்ட இந்த பயிற்சியில் 9 நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் உள்பட இந்திய ஆயுதப்படையினர், கடலோர காவல்படையினர் பங்கேற்றனர். இந்தியாவின் பேரிடர் மேலாண்மை திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த கூட்டு பயிற்சியானது 2 நாட்கள் நடைபெற்றது.