சென்னையில் மாஞ்சா நூல் பட்டு இருவர் படுகாயமடைந்த விவகாரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை கொடுங்கையூரை சேர்ந்த பாலமுருகன் என்பவர் மனைவி மற்றம் இரண்டரை வயது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அசோக் பில்லர் வழியாக பயணித்தபோது, அவரது குழந்தையின் கழுத்தில் மாஞ்சா கயிறு அறுத்து காயம் ஏற்படவே, 7 தையல் போடவேண்டிய நிலை ஏற்பட்டது. இதேபோல், ராயபுரம் பகுதியை சேர்ந்த ஜிலானி பாஷா என்பவருக்கும் மஞ்சா நூல் அறுத்து காயம் ஏற்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் 3 சிறுவர்கள் உட்பட 10 பேரை கைது செய்தனர்.