திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் பகுதியில் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஜம்புகேஸ்வரர் கோயில் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ஜம்புகேஸ்வரர் கோயிலில் தெரு நாய்கள் அதிக அளவில் நடமாடுவது குறித்த புகைப்படங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வாதிட்டார்.
அப்போது கோயில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாய்கள் கட்டுப்படுத்துவது குறித்து மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பக்தர்களின் பாதுகாப்பை கோயில் நிர்வாகம் தான் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், மனு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து பதிலளிக்க திருச்சி மாவட்ட ஆட்சியர், கோயில் இணை ஆணையர், மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனர்.