சிவகங்கையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் பெண்களை குறிவைத்து தாக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் அருகே சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், அவ்வழியாக செல்லும் பெண்களை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டார்.
தொடர்ந்து கல்லூரி மாணவிகளையும் அவர் விரட்டிச் சென்று தாக்கினார். இதையடுத்து காவல்துறையினர் அந்த நபரை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், பாதி வழியிலேயே ஆட்டோவில் இருந்து இறங்கி அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.