தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும்,
இது, அடுத்த இரண்டு நாட்களில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 25 -ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.