உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் அளித்ததால், அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் நிலவுகிறது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் இணைய உக்ரைன் முடிவு எடுத்ததால், அந்நாட்டின் மீது ரஷ்யா 2022-ஆம் ஆண்டு போர் தொடுத்தது.
ஏறத்தாழ 3 ஆண்டுகளாக நீடிக்கும் இந்தப் போரில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா ஆயுதங்களை விநியோகித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனில் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை ரஷ்யா அண்மையில் ஏவியதில், ஏராளமானோர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து தாங்கள் வழங்கிய நீண்ட தொலைவை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்தார்.