அமெரிக்காவின் டெக்சாஸில் இருந்து ஸ்டார்ஷிப் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் பூஸ்டர் தரையிரங்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிக் ராக்கெட்டின் 6-வது சோதனை முயற்சியை மேற்கொண்டது. டெக்சாஸில் உள்ள போகா சிக்கா ஏவுதளத்தில் இருந்து ஸ்டார்ஷிப் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இதனை அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், எலான் மஸ்க்குடன் பார்வையிட்டார். ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்ட போதிலும் பூஸ்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.