செங்கல்பட்டு மாவட்டம் அருங்கல் கிராமத்தில் விவசாய நிலத்தில் புகுந்த முதலையை வனத்துறையினர் போராடி மீட்டனர்.
அருங்கல் கிராமத்தில் ஏரிகள் மூலம் நிலங்களுக்கு நீர் கொண்டுவரப்பட்டு விவசாயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், ஏரியில் இருந்த ராட்சத முதலை ஒன்று விளைநிலத்திற்குள் புகுந்துள்ளது.
இதை பார்த்து அச்சமடைந்த விவசாயிகள், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு விரைந்த வனத்துறையினர், 5 மணி நேரத்திற்கும் மேலாக போராடி முதலையை மீட்டனர்.