மகாராஷ்டிர மக்கள் வரலாறு காணாத வெற்றியை அளித்துள்ளதாக அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: இந்த வெற்றி பிரதமர் நரேந்திர மோடியுடன் மக்கள் இருப்பதை காட்டுகிறது. அவர் அளித்த ‘ஏக் ஹெய்ன் தோ சேஃப் ஹெய்ன்’ என்ற முழக்கத்திற்கு ஏற்ப அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக எங்களுக்கு வாக்களித்துள்ளனர். இது மகாயுதியின் வெற்றி. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் ராம்தாஸ் அத்வாலே ஆகியோரின் வெற்றி, இது ஒற்றுமையின் வெற்றி.
நான் ஒரு நவீன அபிமன்யு, ‘சக்ரவ்யூ’வை உடைக்கத் தெரியும் என்று முன்பே கூறியிருந்தேன். இந்த வெற்றியில் எனது பங்களிப்பு சிறியது, இது எங்கள் அணியின் வெற்றி என்று நினைக்கிறேன்.
மக்கள் தங்கள் ஆணையை வழங்கியுள்ளனர். மேலும் ஏக்நாத் ஷிண்டேவை உண்மையான சிவசேனாவாக மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர், அஜித் பவாருக்கு என்சிபியின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு, முதல்வரின் தேர்வில் எந்த சர்ச்சையும் இருக்காது என்றும், தேர்தலுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது போல் அனைத்து கட்சி தலைவர்களும் கூடி முதல்வரை தேர்வு செய்வோம் என்றும் பாட்னாவிஸ் கூறினார்.