மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது.
மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ஆம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமுள்ள 288 தொகுதிகளிலும் அன்றைய தினம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், 132 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. 50 இடங்களை கூட அந்த கூட்டணியால் கைப்பற்ற முடியவில்லை. காங்கிரஸ் 16 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும், உத்தவ் தக்கரேவின் சிவசேனா கட்சி 20 இடங்களிலும் வெற்றிப்பெற்றன.