ரவிச்சந்திரன் அஸ்வினை சிஎஸ்கே அணி 9 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்ததன் மூலம் அவர் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பினார்.
அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற 577 வீரர்களில் 367 இந்திய வீரர்களும், 210 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றனர். இந்த ஐபிஎல் ஏலத்தில் மொத்தமாக 207 வீரர்கள் மட்டுமே ஏலம் எடுக்கப்படுகின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஸ்வினை சிஎஸ்கே அணி 9 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இதன் மூலமாக 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஸ்வின் சிஎஸ்கே அணியுடன் இணைந்துள்ளார்.
இதேபோல கடந்த முறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த நடராஜனை டெல்லி கேபிடல்ஸ் 10 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.