நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே அரிசி கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்செங்கோட்டை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர், கடந்த 2 வருடங்களாக அக்ரஹாரம் பேருந்து நிறுத்தத்தில் அரிசி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த கடைக்குள் சனிக்கிழமை இரவு புகுந்த மர்ம நபர், அங்கிருந்த ஒன்றரை லட்சம் ரூபாயை கொள்ளையடித்ததுடன் கேமராக்களையும் சேதப்படுத்திவிட்டு தப்பினார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பள்ளிபாளையம் போலீசார், அருகே உள்ள கடையின் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.