தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே வலையில் சிக்கிய அரிய வகை கடல் பாலூட்டியை பத்திரமாக கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கொள்ளுக்காட்டு கடலில் வழக்கம்போல் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது வலையில் சுமார் 40 கிலோ எடையும், 1.5 மீட்டர் நீளமும் கொண்ட வின்னிக்குட்டி என்ற அரிய வகை கடல் பாலூட்டி உயிரினம் உயிருடன் சிக்கியது. இதுகுறித்து மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வனத்துறையினர் அறிவுறுத்தலின் பேரில் மீண்டும் வின்னிக்குட்டி கடலுக்குள் விடப்பட்டது.