பொள்ளாச்சி அருகே மாநில அளவில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். ஆச்சிபட்டி தனியார் பள்ளியில் உள்ள விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான இரண்டு நாள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.
8, 10, 12, 14 மற்றும் 16 வயதினருக்கான ஒற்றையர் பிரிவின் கீழ் 5 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. நாக்-அவுட் முறையில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு இடையே காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், மாணவ, மாணவிகள் வெற்றி இலக்கை நோக்கி தங்களது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தினர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகை. கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.