அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் வீணாக வெளியேறும் நிலை உருவாகியுள்ளது.
தா.பழூர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் மற்றும் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ராட்சத குழாய் அமைத்து குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், ஜெயங்கொண்டத்தில் உள்ள உய்யக்கொண்டான் ஏரியின் மதகு ஓரம் செல்லும் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த 6 மாத காலமாக குடிநீர் வீணாகி வருகிறது. நாளொன்றுக்கு 5 ஆயிரம் லிட்டர் வரை குடிநீர் வீணாகி வரும் நிலையில், அரசு அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.