காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் அம்மனின் ஜென்ம நட்சத்திரத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தனர்.
காமாட்சி அம்மனுக்கு பூரம் நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாக கூறப்படும் நிலையில், கார்த்திகை மாத பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு, சக்தி பீடங்களில் முதன்மையான காமாட்சியம்மன் கோயிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து அங்குள்ள கொலு மண்டபத்தில் ஏராளமான பெண்கள் கூடி திருவிளக்கு பூஜை செய்து அம்மனை மனமுருகி வழிபட்டனர்.