தமிழ்நாடு புதுச்சேரி, காரைக்காலில் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் அதி கனமழைக்கும் 28ஆம் தேதி மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை – தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு உள்ளதால், தமிழ்நாடு புதுச்சேரி, காரைக்காலில் வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் அதிகனமழைக்கும்,
28ஆம் தேதி மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.