செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் விசாரணையை டிசம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை சிறப்பு அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் வேலைவாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள, எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார்.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை டிசம்பர் மாதம் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.