இந்து சமய அறநிலையத்துறையின் தவறை மூடி மறைத்து பொதுமக்கள் மீது பழிபோடும் அமைச்சர் சேகர்பாபு பதவி விலகவேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள கோவில்களை முறையாக பராமரிப்பது, சரியான காலத்தில் குடமுழுக்கு செய்வது உள்ளிட்ட பல அடிப்படை பணிகளைக் கூடச் செய்யாமல் இந்து சமய அறநிலையத்துறை தோல்வியடைந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பாபுராஜன்பேட்டை விஜய வரதராஜர் கோவிலை சீரமைக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளதாகவும்
அதேபோல் சோளிங்கர் யோக நரசிம்மர் மலைக்கோவிலில் அடிப்படை வசதிகள் இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருவதாகவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து நீதிமன்றமும்,பொதுமக்களும் பல வகைகளில் கண்டித்த பிறகும் அறநிலையத்துறையிடம் எவ்வித மாற்றமும் இல்லை, முன்னேற்றமும் இல்லை என அவர் குற்றச்சாட்டியுள்ளார்.
எனவே நிர்வாக திறமையற்ற அறநிலையத்துறையின் அமைச்சர் சேகர்பாபு, பதவி விலக வேண்டும் என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.