கனமழை எச்சரிக்கை எதிரொலியாக மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.
வங்கக்கடலில் வலுவடைந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுபெற்று தமிழகம் நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக தேவையான மீட்பு உபகரணங்களுடன், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் அப்பகுதிகளுக்கு விரைந்துள்ளனர். அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுடன் ஒருங்கிணைந்து தேவையான மீட்பு பணிகளில் அவர்கள் ஈடுபடுவார்கள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.