ஈரோட்டில் காலாவதியாகாத மருந்து, மாத்திரைகள் சாலையோரம் வீசப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தில்லை நகர் தெப்பக்குளம் வீதியில் மருந்து, மாத்திரைகள் சாலையோரம் கொட்டப்படிருந்தது. தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், அவற்றை ஆய்வு செய்தபோது, கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் சத்து மாத்திரைகள் மற்றும் மருந்துகள் என்பதும், அடுத்த ஆண்டு வரை பயன்படுத்தக்கூடிய வகையில் இருந்ததும் தெரிய வந்தது.
இந்த மாத்திரைகள் அரசு அல்லது தனியார் மருத்துவமனை பணியாளர்கள் கொட்டி சென்றார்களா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.