மதுரையில் உள்ள வைகையாற்றில் உயிருக்கு போராடிய பாம்புதாரா என்ற அரிய வகை பறவையை இளைஞர் ஒருவர் மீட்டுள்ளார்.
வைகையாற்றில் உள்ள மீன்களை, பல்வேறு பகுதிகளில் வரும் ஏராளமான பறவைகள் உண்டு பசியாறி வருகிறது.
இந்நிலையில், வைகையாற்றில் பாம்புதாரா என்ற பறவை ஒன்று, ஆற்றில் கிடந்த மீனை சாப்பிட்டு கொண்டிருந்தபோது, எதிர் பாராதவிதமாக ஆற்றில் கிடந்த பிளாஸ்டிக் சாக்கு ஒன்றில், அதன் அலகு மாட்டிக் கொண்டது.
இதனால் நீண்ட நேரம் உயிருக்கு போராடி மயங்கியது. இதனை பார்த்த இளைஞர் விஜயகாந்த், பறவையை கையில் ரத்தம் சொட்ட சொட்ட மீட்டுள்ளார்.