கடலூரில் அரசு பேருந்தில் பயணித்த பள்ளி மாணவன், கூட்ட நெரிசலில் சிக்கி கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேவனாம்பட்டினத்தை சேர்ந்த கைலாஷ் என்ற மாணவர், மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நகரில் கனமழை காரணமாக பல்வேறு பேருந்துகளில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. இந்நிலையில், அரசு பேருந்தில் பயணித்த மாணவன் கைலாஷ், கை தவறி கீழே விழுந்தார். அப்போது, பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.