சென்னையில் விட்டுவிட்டு பெய்த மழையால் வியாசர்பாடியில் டிரான்ஸ்பர் வெடித்து சிதறியது.
காந்திபுரம் பகுதியில் மழை பெய்து வந்ததால், அங்கு தாழ்வான இடத்தில் வைக்கப்பட்டிருந்த மின்மாற்றி ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அலறி அடித்துப்படி வேறு பகுதிக்கு ஓடினர். தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து சரி செய்தனர்.
தாழ்வான இடத்தில் உள்ள மின் மாற்றியை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றக்கோரி பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.