சென்னை மெரினாவில் கடும் கடல் சீற்றம் காரணமாக மிதவை ஒன்று கரை ஒதுங்கியது.
தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இது இரவுக்குள் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மெரினாவில் நேற்றிலிருந்தே கடல் அலைகளின் சீற்றம் அளவுக்கதிகமாக காணப்பட்ட நிலையில், துறைமுகத்திற்கு சொந்தமான மிதவை ஒன்று காற்றின் வேகத்தால் இன்று கரை ஒதுங்கியது.
இந்த மிதவை கூண்டு கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கு ஆழமான பகுதி மற்றும் கரைப்பகுதி எது என தகவல்களை கொடுக்க உதவும். தகவலறிந்து விரைந்து வந்த கடலோரக் காவல்படையினர், மிதவை கூண்டை மீட்டெடுத்து நடுக்கடலுக்குக் கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.