தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ஆடுகளை கடித்ததாக கூறி நாயை தூக்கிலிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடமலைக்குண்டு கிராமத்தில் உள்ள காய்கறி வார சந்தை வளாகத்தில் நாய் ஒன்று ஆடுகளை கடித்ததாக கூறப்படுகிறது. நாய்க்கு தண்டனை கொடுக்கும் வகையில் சிலர் நாயின் கழுத்தில் கயிறு கட்டிய அதனை தூக்கிலிட்டு கொடூரமாக கொலை செய்தனர்.