துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா காரணமாக ஈரோடு மாநகராட்சியின் கூட்டம் தொடங்க 2 மணிநேரம் தாமதமானதால் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
ஈரோடு மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று நடைபெறும் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி கூட்டம் நடைபெறும் இடத்தில் மாமன்ற உறுப்பினர்கள் காத்திருந்தனர்.
ஆனால், வெகு நேரமாகியும் அங்கு வராத மேயர் நாகரத்தினம், மேயர் அலுவலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதியின் பிறந்தநாளை மாமன்ற உறுப்பினர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினர்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தை புறக்கணித்த அதிமுகவினர், 2 மணி நேரமாக காத்திருந்தும் மாமன்ற கூட்டம் தொடங்காததால் அங்கிருந்து வெளிநடப்பு செய்தனர். அரசு அலுவலகத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றதற்கு பலரும் கண்டனம் தெடரிவித்துள்ளனர்.