ரயில் பெட்டிகள் தயாரிப்பு : இந்தியாவை நாடும் ரஷ்யா - சிறப்பு கட்டுரை!
May 26, 2025, 06:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரயில் பெட்டிகள் தயாரிப்பு : இந்தியாவை நாடும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Nov 28, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யா தனது வளர்ந்து வரும் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்காக ரயில்கள் மற்றும் அவற்றின் உதிரிபாகங்களை உற்பத்தி செய்ய இந்தியாவில் முதலீடு செய்ய ரஷ்யா முடிவெடுத்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியாவும், ரஷ்யாவும் 70 ஆண்டுகளாக நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. தொலைத்தொடர்பு, ஆட்டோமொபைல், தொழில்துறை சேவைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் மருத்துவ அறுவை சிகிச்சை உபகரணங்கள் போன்ற பல்வேறு துறைகளில் ரஷ்யா இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றன.

காமன் வெல்த் ஆப் இண்டிபெண்டெண்ட் ஸ்டேட்ஸ் எனப்படும் (CIS) சிஐஎஸ் பிராந்தியத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக உறவுள்ள நாடாக ரஷ்யா உள்ளது. உலகளவில் இந்தியாவுடன் வர்த்தக உறவு வைத்திருக்கும் 5வது பெரிய நாடாக ரஷ்யா உள்ளது. இந்தியாவில் அந்நிய முதலீடுகளில் ரஷ்யா 29 வது இடத்தில உள்ளது.

2000 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர இரு தரப்பு உச்சி மாநாட்டில் இரு நாட்டு தலைவர்களும் சந்திக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக இந்திய- ரஷ்ய உறவு வலிமை பெற்றுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவும் ரஷ்யாவும் இருதரப்பு வர்த்தக இலக்கை 30 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், இருதரப்பு முதலீட்டு இலக்கை 50 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் நிர்ணயித்துள்ளன.

2023 ஏப்ரல் முதல் 2024 மார்ச் வரை ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இரு தரப்பு வர்த்தகம் இது வரை இல்லாத அளவில் 66 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

உக்ரைன் மீது படையெடுத்து 36 மாதங்களுக்கும் மேலான நிலையில், ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ளன. குறைந்த விலைக்கு ரஷ்யாவில் இருந்து இந்தியா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது .

இந்த சூழலில், நாட்டின் வளர்ந்து வரும் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்கு இந்தியாவில் முதலீடு செய்ய ரஷ்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் ரயில் மற்றும் உதிரிபாக உற்பத்தியில் முதலீடு செய்ய ரஷ்யா முடிவெடுத்துள்ளது.

இந்தியாவில் முதலீடு செய்வதற்கான முக்கிய மூன்று காரணங்களை ரஷ்ய நிறுவனமான டி.எம்.ஹெச் (TMH) தலைமை நிர்வாக அதிகாரி கிரில் லிபா தெரிவித்திருக்கிறார்.

மற்ற நாடுகளைப் பார்க்கும் போது இந்தியாவின் வட்டி விகிதம் பொருத்தமானதாக இருப்பதால் இந்தியாவில் முதலீடு செய்யவும் தயாராகஇருப்பதாக தெரிவித்த லிபா, ஏற்கெனவே இந்தியாவுடன் பல விநியோக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். ரஷ்யா மீதான பொருளாதார தடை எந்த வகையிலும், இந்தியாவுடன் வர்த்தக உறவை பாதிக்காது என்றும் லிபா தெளிவு படுத்தி இருக்கிறார்.

ஏற்கெனவே, 1,920 வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகளைத் தயாரிப்பதற்கும், அவற்றை 35 ஆண்டுகள் பராமரிப்பதற்கும் 55,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் ரஷ்யாவின் கைனெட் ரயில்வே சொல்யூஷன்ஸ் கையெழுத்திட்டுள்ளது. இந்த கைனெட் ரயில்வே சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் டி.எம்.ஹெச் (TMH) ஒரு பங்குதாரர் என்பது குறிப்பிடத் தக்கது.

ரஷ்யாவிற்கு பெரிய உள்நாட்டு தேவைகள் உள்ளன அதற்காக இந்தியாவில் உற்பத்தி வசதிகளை அமைக்க விரும்புகிறது. இது இந்தியாவுக்கு லாபம் தான் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

Tags: Indiarussiamanufacture trainsCommonwealth of Independent Statesforeign investment in India.
ShareTweetSendShare
Previous Post

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாதிரி நரசிம்ம பெருமாள் ஆலய கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Next Post

தொடர் மழை எதிரொலி – சபரிமலையில் தமிழக பக்தர்களின் வருகை குறைவு!

Related News

என்டிஏ மாநில முதல்வர்கள் கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக ஆலோசனை – மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தகவல்!

வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை!

பாக்.,கிற்கு ரூ.30,000 கோடி இழப்பு : சின்னாபின்னமான பாகிஸ்தான் விமானப்படை!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – மதுரையில் மூவர்ண கொடி பேரணி!

பாகிஸ்தானுக்கு ஆதரவு ஏன்? : U -TURN அடித்த ட்ரம்ப் – குழம்பும் வெள்ளை மாளிகை!

Load More

அண்மைச் செய்திகள்

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் – மலர் கண்காட்சியை காண ஆர்வம்!

இந்தியா இல்லாவிட்டால் “NO LIFE” : தயவை நாடியிருக்கும் 12 நாடுகள்!

ஆண்டிபட்டி அருகே  வைகை அணையை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள்!

ஆர்ஜேடி கட்சியில் இருந்து தேஜ் பிரதாப் நீக்கம் – தந்தை லாலு பிரசாத் யாதவ் நடவடிக்கை!

பொதுமக்களின் நலனில் முதல்வருக்கு அக்கறையில்லை – எல்.முருகன் குற்றச்சாட்டு!

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

கும்பகோணம் பாணாதுறை பாணபுரீஸ்வரர் கோயிலில் அபிஷேகம் செய்யும் பணியாளர்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

தூய்மை பணியாளர்கள் குப்பை வண்டியில் அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும் – சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்!

சேலம் கொற்றவை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் – முகூர்த்த கால் நடும் விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies