விடுமுறை தினத்தையொட்டி தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
சபரிமலையை நோக்கி செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்தில் புனித நீராடிவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், விடுமுறை நாளையொட்டி குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. லேசான சாரல் மழையுடன் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் அருவியில் புனின நீராடி மகிழ்ந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் பொதுமக்கள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். ஜலகாம்பாறை பகுதியில் உள்ள முருகன் கோயிலுக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள நீர்வீழ்ச்சியில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
திருப்பத்தூரில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.