வேலூரில் தொடர் மழையால் கமாண்டல நாகநதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து பயிர்கள் சேதமடைந்தன.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
அணைக்கட்டு பகுதியில் பெய்த கனமழையால் கமாண்டல நாகநதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும் விவசாய நிலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்ததால், பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.