ரபேல் விமானங்கள் மற்றும் ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் அடுத்த மாதத்திற்குள் உறுதி செய்யப்படும் என்று, இந்திய கடற்படை தளபதி திரிபாதி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற வருடாந்திர கடற்படை நாள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்திய கடற்படை தளபதி தினேஷ் கே.திரிபாதி கலந்து கொண்டு பேசினார். (GFX IN) அப்போது, பிரான்ஸ் நாட்டிலிருந்து 26 ரபேல் வகை போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்காக இந்திய கடற்படை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறினார்.
மஜகாவன் கப்பல் கட்டும் நிறுவனத்தில் கூடுதலாக 3 ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கி கப்பல்களை கட்டுவதற்காக பிரான்ஸ் கடற்படை குழுவினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
ரபேல் விமானங்கள் மற்றும் 3 ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் அடுத்த மாதத்திற்குள் உறுதி செய்யப்படும் என்றும், 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்திய பெருங்கடல் பகுதியில் சீனக் கடற்படையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் இந்திய கடற்படை தளபதி திரிபாதி தெரிவித்தார்.
 
			 
                    















