பெரம்பலூர் அருகே ஏரியின் மதகு உடைந்து விளை நிலங்களில் வெள்ள நீர் புகுந்ததில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிர்கள் வீணாகின.
ஃபெஞ்சல் புயல் காரணமாக வேப்பந்தட்டை சுற்று வட்டாரத்தில் சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அரும்பாவூரில் உள்ள பெரிய ஏரியின் மதகு உடைந்ததில், 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் நஷ்டமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னரே ஏரியின் மதகில் ஏற்பட்ட விரிசல் குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளாததே பயிர்கள் பாதிக்க காரணம் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்குவதுடன், மதகுப் பகுதியை மீண்டும் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.